நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால்...

நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

உளவியல் அறிவியல்(Psychological Science) இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஒருவர் வாழ்வில் நேர்மறை எண்ணம் அதிகம் கொண்டிருந்தால் அவர் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மேலும், இந்த நேர்மறை சிந்தனை எதிர்காலத்தில் சிறந்த நினைவாற்றலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயதாகும்போது பலர் மறதியால் மிகவும் அவதிப்படும் சூழலில் இளம் வயதில் இருந்து நேர்மறை சிந்தனையோடு இருந்தால் வயதான காலத்தில் மறதியைத்  தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆய்வில் நடுத்தர வயது மற்றும் மூத்தவர்கள் உள்பட 991 பேர் பங்கேற்றனர். 1995 -1996, 2004 -2006 மற்றும் 2013 -2014 ஆகிய மூன்று கால இடைவெளியில் இதுகுறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. 

ஒவ்வொரு மதிப்பீட்டிலும் பங்கேற்பாளர்கள் கடந்த 30 நாள்களில் தாங்கள் அனுபவித்த பல நேர்மறையான உணர்ச்சிகளைப் பற்றி தகவல் அளித்தனர். அவர்களின் நினைவுத்திறன் குறித்தும் சோதனை செய்யப்பட்டது. அதேபோன்று வயது, பாலினம், கல்வி, மனச்சோர்வு, எதிர்மறை பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தனர்.

'வயதுக்கு ஏற்ப நினைவுத்திறன் குறைந்துவிட்டது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன' என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், ஆய்வறிக்கையில் மூத்த எழுத்தாளருமான கிளாடியா ஹேஸ் கூறினார்.

'இருப்பினும், அதிக அளவு நேர்மறையான தாக்கம் கொண்ட நபர்கள் நினைவுத்திறன் பாதிப்பு குறைவாகவே இருந்தது' என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டதாரி மற்றும் ஆய்வின் முதன்மை ஆசிரியரான எமிலி ஹிட்னர் கூறினார்.

மேலும் இதுகுறித்த எதிர்கால ஆராய்ச்சிகள் உடல் ஆரோக்கியம், சமூக உறவுகள் போன்ற நேர்மறையான தாக்கத்தையும், நினைவுத்திறனையும் இணைக்கக்கூடிய தொடர்பைக் கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com