புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வயதான ஊழியர்கள் பணியிடத்தில் விலக்கப்படுவதாக உணர்வது ஏன்? - ஆய்வு கூறும் தகவல்!

வயதான ஊழியர்கள் பணியிடத்தில் விலக்கப்படுவதாக உணர்வது உண்மைதான் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

News image
Updated On :6 மார்ச் 2020, 7:36 am

வயதான ஊழியர்கள் பணியிடத்தில் விலக்கப்படுவதாக உணர்வது உண்மைதான் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் அறிவாற்றல் திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொள்வதே பணியிடத்தில் விலக்கப்படும் உணர்வு ஏற்படக் காரணம் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

பணியிடத்தில் வயதானவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாகவும், இளையவர்களை விட சிறந்த சமூக உறவைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். பணி ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் அனுபவம் பெற்றுள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் பணியிடத்தில் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைஞர்களிடையே வயதானவர்களைப் பற்றிய எதிர்மறையான ஸ்டீரியோடைப்கள் பரவலாக காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, இளைஞர்களை விட வயதானவர்களுக்கு சுறுசுறுப்பு குறைவாக உள்ளது என்று இளைஞர்கள் எண்ணிக்கொள்கின்றனர். இத்தகைய எதிர்மறையான நிலைப்பாடுகளை உள்வாங்கும் வயதான பணியாளர்கள், பணியிடத்தில் தங்கள் நிறுவனத்துக்கும், சக ஊழியர்களுக்கும் குறைவான மதிப்புடையவர்களாக இருப்பதாக உணர்கின்றனர். ஒருகட்டத்தில் சிலர் பணியிடத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும், சிலர் சூழ்நிலை காரணமாக ஒருவித மன அழுத்தத்தில் பணியினைத் தொடர்வதாகவும், அதிலும் குறைவான ஊதியத்தில் சிறிய பொறுப்பில் இருப்பவர்களே இதனை அதிகம் எதிர்கொள்வதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்டுள்ளது. 

0 முதல் 76 வயது வரையிலான மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள 1,306 ஊழியர்களிடம் பாஸல் பல்கலைக்கழக உளவியலாளர்கள் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும் வயதானவர்களின் அனுபவத் திறன் நிறுவனத்துக்கு சிறந்த மூலதனமாக இருக்கிறது என்று ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் டாக்டர் ஜனா நிகிடின் தெரிவிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.