நீங்கள் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா?

நீங்கள் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த உலகில் மகிழ்ச்சியானவர்கள் நீங்கள்தான்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நீங்கள் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த உலகில் மகிழ்ச்சியானவர்கள் நீங்கள்தான். பயணத்துக்கு அடிமையானவர்கள் மற்றவர்களைவிட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு 7% வாய்ப்பு அதிகமுள்ளது என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

சுற்றுலா பகுப்பாய்வு(Tourism Analysis) என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், வீட்டிலிருந்து குறைந்தபட்சம் 120 கி.மீ தூரத்திலாவது தவறாமல் பயணிப்பதாகக் கூறுபவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறுகின்றனர். அவ்வப்போது அல்லது மிகவும் அரிதாகவே பயணிப்பதாகக் கூறுபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அவ்வளவாக இல்லை என்றும் சலிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர். 

வேலை, குடும்ப வாழ்க்கை மற்றும் நண்பர்கள் போன்ற விஷயங்கள் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கின்றன. அந்த வகையில் பயண அனுபவங்கள் வாழ்வில் திருப்தியை அளிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. 

வழக்கமான நடைமுறையிலிருந்து வெளியேறி புதிய விஷயங்களை அனுபவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. 

பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பயணத்தின் முக்கியத்துவம், குடும்ப வாழ்க்கை முறை, விடுமுறை எதிர்பார்ப்பு, வருடத்திற்கு பயணங்களின் எண்ணிக்கை, பயண அனுபவங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. 

கணக்கெடுப்பில் பங்கேற்ற 500 பேரில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் சராசரியாக ஆண்டுக்கு நான்கு பயணங்கள் மேற்கொள்வதாகக் கூறினர். பதிலளித்தவர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த விடுமுறையும் எடுக்கவில்லை. வெளியே எங்கும் செல்லவில்லை என்றனர். மற்றவர்கள் அவ்வப்போது குடும்பத்தினருடன் வெளியில் செல்வதாகத் தெரிவித்தனர். 

தற்போது கரோனா பாதிப்பு குறைந்து சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வருவதால் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள மக்களுக்கு ஒரு உந்துதலாக இந்த ஆய்வு இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பயணங்களின் மூலமாக மனஅழுத்தம் சீராகிறது. இதனாலே வழக்கமான செயல்களைத் தாண்டி அவ்வப்போது பயணத்தை மேற்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com