உடல் எடையைக் குறைக்க உதவும் கொத்தமல்லி/பார்ஸ்லி ஜூஸ்

உடல் எடையைக் குறைக்க உதவும் கொத்தமல்லி/ பார்ஸ்லி ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.. 
பார்ஸ்லி இலைகள்
பார்ஸ்லி இலைகள்

உடல் எடையைக் குறைப்பது என்பது தற்போது பலருக்கும் கனவாக இருக்கிறது. சத்தான கலோரி குறைவான உணவுகள், உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதில் உடல் எடையைக் குறைக்க உதவும் கொத்தமல்லி/ பார்ஸ்லி ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.. 

ஒரு கையளவு பார்ஸ்லி அல்லது கொத்தமல்லி இலையை நன்றாக கழுவி அரைத்துகொள்ளவும். அதில் ஒரு எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும். வேண்டுமெனில் இதில் சிறிது இஞ்சிச்சாறும் குடித்து வரலாம். 

இந்தச் சாறை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். தொடர்ந்து 5 நாள்கள் குடித்துவிட்டு பின்னர் 10 நாள்கள் வரை இடைவெளி விட்டு அருந்தவும். 

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி நல்ல கொழுப்பை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. 

ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.

இவ்வாறு குடித்துவர ஒருநாளில் 3 கிலோ வரை எடையை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர். 

சத்தான உணவுகளை சாப்பிட்டு லேசான உடற்பயிற்சி செய்துவர உடல் எடையை குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும். 

கொத்தமல்லி, பார்ஸ்லி ஆகிய இரண்டும் ஓரளவு ஒத்த மருத்துவ குணங்களைக் கொண்ட வெவ்வேறு செடிகளாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com