அதிக உடல் பருமன் உடையவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும்: ஆய்வில் தகவல்

அதிக உடல் பருமன் உடையவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும்: ஆய்வில் தகவல்

உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் எண்டோகிரைன் சொசைட்டியின் 'ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

உடல் பருமன் என்பது இன்று பெரும்பாலானோரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்னை. உணவு பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம், உடல் இயக்கமின்மை ஆகியவை முக்கியக் காரணங்களாகும். உடல் எடையைக் குறைக்க இன்று பலரும் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். ஏனெனில், உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். 

இந்நிலையில் உடல் பருமன் கொண்டவர்களுக்கோ அல்லது உடலில் கொழுப்பின் அளவு அதிகம் இருந்தால் அவர்களுக்கு 'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்பு மெலிதல் அல்லது எலும்பு முறிவு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

சாதாரணமாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு எலும்பு முறிவு அவ்வளவு எளிதில் ஏற்படாது என்று கூறுவதுண்டு. ஆனால், உண்மையில் இந்த ஆய்வின் முடிவுகள் அதற்கு மாறாக உள்ளது. 

மேலும் இந்த ஆய்வில் உடல் பருமன் கொண்ட பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர் ராஜேஷ் கே ஜெயின் கூறினார். ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கு உடல் எடையைத் தாண்டி வேறு சில காரணங்களும் இருப்பதாகவும் அவர் கூறினார். 

60 வயதுக்குட்பட்ட 10,814 பேரின் எலும்பு அடர்த்தி மற்றும் உடல் அமைப்பு குறித்து தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேர்வுக் கணக்கெடுப்பு (NHANES) 2011-2018 இல் இருந்து ஆய்வு செய்தது.

உடல் பருமன் கொண்ட ஆண்களுக்கு பாதிப்பு அபாயம் அதிகம் இருப்பதால் அவர்களது மரபியல், ஸ்டீராய்டு பயன்பாடு போன்ற பிற காரணிகளை ஆய்வு செய்து மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஆய்வாளர் ஜெயின் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com