உடலில் கெட்ட கொழுப்பைக் கரைக்க... என்னென்ன சாப்பிடலாம்?

உடலில் கெட்ட கொழுப்பைக் கரைக்க... என்னென்ன சாப்பிடலாம்?

சில உணவுப் பொருள்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கலாம். இதனால் உடல் எடை குறையும். 

உடல் பருமன் பிரச்னையை சரிசெய்ய இன்று பலரும் பலவிதங்களில் முயற்சித்து வருகின்றனர். 

அந்த வகையில் சில உணவுப் பொருள்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கலாம். இதனால் உடல் எடை குறையும். 

உடலில் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் உணவுகள் 

♦ பூண்டு, வெங்காயம் இந்த இரண்டு பொருள்களிலும் கொழுப்பை கரைக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன. பெரும்பாலாக அனைத்து உணவுகளிலும் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். 

♦ அடுத்ததாக, ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகோன் கெட்ட கொழுப்பினை அழிக்கும் திறன் கொண்டது. 

♦ பீன்ஸில் உள்ள நார்ச்சத்தும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது.  நார்ச்சத்து நிறைந்த பொருள்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். 

♦ பசலைக்கீரையில் உள்ள லூடின் எனும் வேதிப்பொருள் கெட்ட கொழுப்பைக் கரைக்கும். 

♦ பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளும் சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் உடல் கொழுப்பைக் குறைக்கும். 

♦ பெரிஸ் பழ வகைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை என்பதால் அவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 

♦ உடலில் கொழுப்பைக் கரைக்கும் மற்றொரு முக்கிய பொருள் கொள்ளு. கொள்ளு சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம்.

♦ புடலங்காய், சுரைக்காய் ஆகியவையும் உடலில் கொழுப்பைக் குறைத்து உடலை எடையைக் குறைக்கும். 

♦ இதுதவிர உணவுகளில் அல்லது தேநீரில் அடிக்கடி இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம். 

♦ உருளைக்கிழங்கிலும் மாவுச் சத்து இருந்தாலும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நார்ச்சத்து இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com