வீட்டிலேயே உடற்பயிற்சி: தேவையான 5 முக்கிய சாதனங்கள்!

கரோனா பொதுமுடக்க காலத்தில் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய உதவும் 5 முக்கிய சாதனங்கள் குறித்துப் பார்க்கலாம். 
வீட்டிலேயே உடற்பயிற்சி: தேவையான 5 முக்கிய சாதனங்கள்!

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து மருத்துவர்களும் உடல்நல நிபுணர்களும் வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

கரோனா பொதுமுடக்க காலத்தில் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தே உடற்பயிற்சிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

மேலும், கரோனா காலத்தில் பலருக்கும் உடல்நலப் பிரச்னைகளும் ஏற்பட்டன. இந்தவொரு சூழ்நிலையில் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். 

தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிலையில், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கான 5 முக்கிய பொருள்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

ஸ்கிப்பிங் கயிறு

ஸ்கிப்பிங் செய்வது சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். ஒட்டுமொத்தமாக உடலை இயக்கக்கூடியது. ஸ்கிப்பிங் கயிறுகளில் கூட ஸ்மார்ட் கயிறுகள் வந்துவிட்டன. இதனை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும். அந்தவகையில் வீட்டில் கண்டிப்பாக ஸ்கிப்பிங் கயிறு வைத்திருங்கள். 

ஸ்மார்ட் வாட்ச் 

உங்களுடைய தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் உடலியக்கத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடியது ஸ்மார்ட் வாட்ச். இதன் பயன்பாடு தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. 

இதனை உங்கள் மொபைலுடன் இணைத்து உங்களுடைய உடல் இயக்கங்களை தெரிந்துகொள்வதுடன் மொபைல் போனில் இருப்பவற்றையும் வாட்ச் மூலமாக கண்காணிக்கலாம்.

ஸ்மார்ட் சைக்கிள் 

பலருக்கும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி என்பது நடைபயிற்சி அல்லது சைக்கிளிங் -ஆக இருக்கும். ஆனால், கரோனா காலத்தில் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே ஓரிடத்திலேயே பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் சைக்கிளை வாங்கி பயன்படுத்தலாம். உங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு சரிபடுத்திக்கொள்ளலாம். 

போர்ட்டபிள் த்ரெட்மில்

உடற்பயிற்சிக் கூடங்களில் மிகவும் முக்கியமான அடிப்படைக் கருவி த்ரெட்மில் எனும் நடைப்பயிற்சி, ஓடுதலுக்கு  பயன்படும் இயந்திரம். உடற்பயிற்சிக்கான மிக எளிமையான சரியான சாதனம் என்று கூறலாம். 

அந்தவகையில் தற்போது குறைந்த எடையுடைய த்ரெட்மில் சாதனங்கள் பல இருக்கின்றன. வீட்டில் எந்தவொரு இடத்திலும் பயன்படுத்தும் அளவுக்கு எளிதாக கையாளக்கூடியவையாகவும் இருக்கின்றன.

வீட்டில் நீங்கள் டிவி பார்க்கும்போதுகூட வீட்டிலேயே த்ரெட்மில் வைத்து உடற்பயிற்சி செய்யலாம். 

கெட்டில்பெல்

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அதிகமாக கார்டியோ பயிற்சிகளை எடுக்க வேண்டும். அந்தவகையில் பல்வேறு விதமான உடற்பயிற்சிகளுக்கு கெட்டில்பெல் பயன்படும். சராசரியான எடையில் உங்களுடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு ஜோடி கெட்டில்பெல்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இதிலும் ஸ்மார்ட் கெட்டில்பெல்கள் வந்துவிட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com