நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?

டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா?

அனைத்து வயதினருக்கும் பிடித்த உணவுப்பொருள்களில் ஒன்றுதான் சாக்லேட். அதிலும் குழந்தைகள் என்றாலே நினைவுக்கு வரும் ஒருபொருள்.

கோப்புப்படம்

Updated On :

அனைத்து வயதினருக்கும் பிடித்த உணவுப்பொருள்களில் ஒன்றுதான் சாக்லேட். அதிலும் குழந்தைகள் என்றாலே நினைவுக்கு வரும் ஒருபொருள். குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்தாலும், அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தை ஆகிவிடும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. 

அதுபோல வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் சாக்லேட் ​சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்துவதுண்டு. 

இதையடுத்து சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றே பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. 

சாக்லேட்டின் தனிச்சுவைக்கு காரணமான கோகோ எனும் பொருள்தான் அனைவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது. எனினும், இதுதவிர சாக்லேட்டுகளில் வேறு சில பொருள்களும் கலக்கப்படுகின்றன. முடிந்தவரை ரசாயனம் கலக்காத கோக்கோ அதிமுள்ள சாக்லேட்டுகளை சாப்பிட்டால் நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

Story image

குறைந்தது 70% கோகோ பொருள் இருக்கும் சாக்லேட்டுகளை சாப்பிட வேண்டும். ஒரு சாக்லேட்டில் 700 கலோரி உள்ளது. 24 கிராம் சர்க்கரை இருக்கிறது. 

அதிலும் சமீபத்திய ஓர் ஆய்வில், சர்க்கரை மற்றும் கொழுப்பு இல்லாத டார்க் சாக்லேட்டுகள் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக இதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏனெனில், டார்க் சாக்லேட்டில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. 

டார்க் சாக்லேட் - பயன்கள்

♦ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது.

♦ இதயக்கோளாறுகள், குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது. 

♦ ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

Story image

♦ உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாக்லேட் சாப்பிட வேண்டுமெனில் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். 

♦ சரும அழகுக்கு உதவுகிறது. 

♦ இளமையைத் தக்கவைக்க உதவுகிறது. 

♦ மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவுகிறது. 

♦ மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

♦ மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப, கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம். 

எந்த ஒரு உணவையும் அளவாக எடுத்துக்கொண்டால் அதன் முழு பலன்களைப் பெற முடியும். அந்தவகையில் டார்க் சாக்லேட்டையும் அளவோடு சாப்பிட்டால் பயன் இருக்கும். 

Related Article

உதடுகள் கருப்பாக இதுதான் காரணம்! சரிசெய்யும் வழிகள்!

கண் மை/ காஜல் பயன்படுத்துவது நல்லதா?

முடி வறட்சிக்கு என்னதான் தீர்வு?

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பெண்கள் அதிகம் மது அருந்துவதற்கு காரணம் என்ன?

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.