மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!

இந்த சமுதாயம் இருக்கே.. பெண்களை நல்லா தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் வல்லமை பெற்றதுதான்.
மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!
மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!


இந்த சமுதாயம் இருக்கே.. பெண்களை நல்லா தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் வல்லமை பெற்றதுதான். பெண்கள் என்றால் நாட்டின் கண்கள், தியாகிகள், குடும்பத்தின் தூண்கள் என்றெல்லாம் பட்டம் கொடுத்து, பட்டம் கொடுத்தே, கரும்பைப் போல பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளும்.

அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

குடும்பம், குழந்தைகள், கணவர், பெற்றோர் என எல்லோரையும் பார்த்துக் கொள்ளும் பெண்கள் தற்போது வேலைக்கும் செல்கிறார்கள். அனைத்திலும் தங்களது பன்முகத் திறமையைக் காட்டி வென்றெடுக்கிறார்கள். ஆனால், இத்தனை பணிச்சுமைக்கிடையே ஒரே ஒரு விஷயத்தை மறந்துப் போகிறார்கள். அதுதான் தன்னைத் தானே பராமரிப்பது, தன்னையும் கவனிப்பது, காதலிப்பது போன்றவை.

இது மெல்ல அதிகரித்து, நேரமின்மை, களைப்பு போன்றவற்றால் தங்களது நலனில் கூட அக்கறை செலுத்த முடியாமல் போகிறது.

குடும்பம் - வேலை என்று அனைத்தையும் சரியாகச் செய்தாலும் பல பெண்களுக்கு, தங்களை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். அதற்குக் காரணம், ஒவ்வொருவரும் முதலில் அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டியது அவசியம் என்பதே.

நவீன யுகத்தில், பெண்கள் முதலில் தங்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் விரும்புவது, தங்களது தேவைகள், தங்களுக்கு மதிப்பளிப்பது போன்றவற்றை செய்து கொள்ள வேண்டும். இது சுயநலம் என்பது துளியும் இல்லை.

பல ஆண்டு காலமாக மனநல மருத்துவர்கள் இதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள். பெண்கள் நல்ல ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் தங்கள் மீதான காதலை அதிகரிக்க வேண்டும் என்பதே அது.  இது உடல் நலனுக்கும் மன நலனுக்கும் மிகவும் முக்கியம்.

எனவே முதலில் நீங்கள் விரும்பும் நியாயமான விஷயங்களுக்கு ஆமாம் என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். இதை வாங்கினால் நன்றாக இருக்கும், இதைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஒரு பொருளை மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் ஒரு முறை என்று கால அவகாசம் ஒதுக்கி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது செய்து கொள்ளுங்கள்.

எப்போதும் தங்களது தேவைகளை பட்டியலின் கடைசியில் வைப்பதை மாற்றி முடிந்த அளவுக்கு முன்னெடுத்து வாருங்கள். அது அத்தியாவசியமில்லாமல் இருந்தாலும் உங்களுக்கு அவசியம் என்பதை உணருங்கள்.

எனவே, ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகளிர் நாளில் மற்றவர்கள் வாழ்த்து சொல்வது மற்றும் கேக் வெட்டிக் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், அன்றாடம் உங்களை நீங்கள் கொண்டாடுங்கள். பூரண மகிழ்ச்சி பெறுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com