பண்டைக் காலங்களில் கடல் கடந்து வணிகம் செய்தவர்களின் முக்கிய வர்த்தக பொருளாக இப்பயிர் இருந்துள்ளது. இதில் ஜாதிக்காய் அதன் பயன்பாட்டு அடிப்படையில், உலகப் பிரசித்தி பெற்ற நறுமணப்பயிராக உள்ளது.
ஜாதிக்காயின் பிறப்பிடம் இந்தோனேசியாவின் பான்டா தீவுகளாகும். மலேசியாவில் பினாங்கிலும் ஜாதிக்காய் அதிகமாக விளைகிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய கேரள மற்றும் தமிழகத்தின் நீலகிரி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, பாலமோர், வேளிமலை, ஆறுகாணி, களியல் உள்ளிட்ட இடங்களில் ஜாதிக்காய் பயிராகிறது.
உருண்டையாக பெரிய அளவிலான எலுமிச்சை வடிவில் இருக்கும் ஜாதிக்காய்கள், அதன் தடிமனான மேல் தோடுகள், உள்ளிருக்கும் கொட்டை, கொட்டையைச் சுற்றி பூ வடிவில் இருக்கும் ஜாதிப்பத்திரி என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இதில் மேல் தோடுகளுக்கு அதிக விலை கிடைப்பதில்லை, ஜாதிப் பத்திரியும், கொட்டையும் அதிக விலை மதிப்பு கொண்டவை. ஜாதிக்காய் கொட்டை மற்றும் ஜாதிப்பத்திரி ஆகியவை பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டவை.
ஜாதிப்பத்திரியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
* செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
ஜாதிப்பத்திரி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வாயு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
* ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஆபத்தான நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
* மன அழுத்தத்தைக் குறைக்கிறது
இது மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. பதற்றத்தைக் குறைத்து, அமைதியாக உணர வைக்கிறது. மேலும், மன சோர்வையும் போக்குகிறது. அதுமட்டுமின்றி, நினைவாற்றலையும் பெருக்குகிறது.
* சிறுநீரகங்களைப் பாதுகாக்கிறது
ஜாதிப்பத்திரியில் சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தடுக்க உதவுகிறது. சிறுநீரக நோய்த் தொற்றுகள் மற்றும் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
* சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது
இது சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது. இது காய்ச்சல் மற்றும் வைரஸ் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது இருமல் சிரப் தயாரித்தலில் பயன்படுகிறது. ஜாதிப்பத்திரி ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாகும்.
ஜாதிப்பத்திரியில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு, ஜாதிப்பத்திரியை பயன்படுத்துவது சிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆந்திரம்: கலப்பட பால் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14ஆனது!

தண்ணீர் குழாய் உடைப்பால் குழியில் சிக்கிய லாரி! | CBE

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்க் கப்பல்களுக்கு பாக். கடற்படை பாதுகாப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இணைந்த பிளெஸ்ஸிங் முஸராபானி!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

