பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வாழைப்பூ சாப்பிடுவதால் நன்மைகள் என்னென்ன?

கால்சியம், பொட்டாசியம் என பல்வேறு சத்துகள் நிறைந்துள்ள வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் என்னென்ன?

Published On :

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. 

♦வாழைப்பூவின் முதல் நன்மையாகப் பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும். 

♦ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும். 

♦வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம். 

♦ உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. 

♦மலட்டுத்தன்மை பிரச்னை உள்ளவர்களும் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 

♦ ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம். 

♦ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 

♦ மூலப் பிரச்னைகளுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. 

எப்படி சாப்பிடலாம் 

♦வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். 

♦ உப்பு போட்டு அவித்தோ, பொரியல் செய்தோ, பருப்பு போட்டு கூட்டு செய்தோ சாப்பிடலாம். 

♦ வாழைப்பூவை வேகவைத்து சாறையும் பருகலாம். 

♦ வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.