ரத்த சர்க்கரை அளவை தேன் அதிகரிக்குமா?

நீரிழிவு நோயாளிகளின் மிகப்பெரிய எதிரியாக சர்க்கரை பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீரிழிவு நோயாளிகளின் மிகப்பெரிய எதிரியாக சர்க்கரை பார்க்கப்படுகிறது. சர்க்கரைக்கு மாற்றாக தேன், வெல்லம் போன்ற மாற்றுப் பொருட்களை நாடுகிறார்கள். 

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேனுக்கு மாறுவது சிறந்ததா என்பது  மக்களின் கேள்வியாக உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் உண்மையில் ஆரோக்கியமானதா?

வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது தேனில், குளுக்கோஸை விட அதிக பிரக்டோஸ் உள்ளது. 1 தேக்கரண்டி தேனில் உள்ள கார்போஹைட்ரேட் உள்ளடக்கமானது, அதே அளவு வெள்ளை சர்க்கரையை விட அதிகமாக உள்ளது. 

தேனில் உள்ள நன்மை என்னவென்றால், இது வெள்ளை சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் மதிப்பைக் கொண்டுள்ளது.

தேனில்  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது உதவியாக இருக்கும். எவ்வாறாயினும், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேனுக்கு மாறுவதற்கு முன்பு மருத்துவர்களின் பரிந்துரைக்கு பிறகு மாற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com