சூப்பர் சர்க்கரைப் பொங்கல்.. செஃப் கௌஷிக் ஷங்கரின் சீக்ரெட்

அரிசியும் வெல்லமும் சரியான அளவில் இருந்தாலே அது சர்க்கரைப்பொங்கல்தான்.
சூப்பர் சர்க்கரைப் பொங்கல்.. செஃப் கௌஷிக் ஷங்கரின் சீக்ரெட்

பொங்கல் பண்டிகை என்றாலே சுவையான சர்க்கரைப் பொங்கல்தான் சிறப்பு. அதனை எல்லோருமே எளிதாக செய்துவிடலாம். ஒரு குறையும் இருக்காது. அரிசியும் வெல்லமும் சரியான அளவில் இருந்தாலே அது சர்க்கரைப்பொங்கல்தான்.

ஆனால், வேற லெவல்.. சூப்பர் என்றெல்லாம் சாப்பிட்டவர்கள் பாராட்ட வேண்டும் என்றால், அப்படி ஒரு சர்க்கரைப் பொங்கல்.. சூப்பர் சர்க்கரைப் பொங்கல் செய்து அசத்த அருமையான யோசனை இருக்கிறது.

இந்த யோசனையை எல்லாம் நாங்கள் தரவில்லை. தி மேட் செஃப் என்று மிகவும் பிரபலமான சமையல் கலைஞர் செஃப் கௌஷிக் ஷங்கர் தான், இத்தனை காலம் ரகசியமாக வைத்திருந்த பொங்கல் சீக்ரட்டை வெளியிட்டுள்ளார்.

முதலில் பொங்கல் செய்யும் பாத்திரத்தில் பருப்பையும் அரிசியையும் வெறுமனே லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதில் நெய் மற்றும் பால் சேர்த்து வறுத்த பின் அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெல்லம் சேர்க்கலாம். 

மிகவும் முக்கியமான மற்றும் கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் குங்குமப்பூ மற்றும் பச்சைக் கற்பூரத்தை சேர்க்கலாம். இது சர்க்கரைப் பொங்கலின் ஃபிளேவரை தூள் கிளப்ப வைக்கும் என்று கூறியிருக்கிறார்.

பொங்கல் பண்டிகையின் சிறப்புகள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, சொல் சுவை மிகுந்த பொருள் செரிவுடன் இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடுஇணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் பண்டிகை.

இலக்கியத்தோடு நில்லாமல் அறிவியல் திறனால் உலகுக்கே வழிகாட்டியவர்கள் தமிழர்கள். கோள்களை கணக்கிட்டார்கள். நட்சத்திரங்களை ஆராய்ந்தார்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்று அன்றே அறிந்து, நன்றி சொல்லும் பண்டிகையை உருவாக்கிவைத்தனர். 

எந்தவொரு சமூகத்துக்கும் சொந்தமில்லாமல், தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுவதே இந்த தைப் பொங்கலின் சிறப்பு. தமிழ் மொழியைப் போலவே, பொங்கல் பண்டிகையின் தோற்றமும் பல ஆயிரம் ஆண்டுகள் என்கிறது வரலாறு. புறநானூறிலும், அறநானூரிலும் தைப்பொங்கல் குறித்த குறிப்புகள் இருக்கின்றன.

நிலத்தை உழுது, நாற்று நட்டு, இரவு பகல் பாராது நெல் விதையை நெல் மணியாக்க பாடுபடும் விவசாயிகளின் உழைப்பு சொல்லில் மாளாது. வேளாண்மை நெருங்கும் போது விவசாயிகளின் கையில் காசும் இருக்காது. நெல் கதிர் அறுவடைக்குத் தயாராகி, அறுவடை முடிந்து குவியலாக குவிக்கப்படும்போதுதான் விவசாயிகளின் மனம் நிறையும். அதனால்தானோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். அப்போதும் தான் பாடுபட்டதற்கு கிடைத்த பயனாகக் கருதாமல், சூரியனுக்கு நன்றி சொல்லித்தான் தனது மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளான் தமிழன். இந்தப் பண்டிகை அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருப்பதால்தான், காலம் காலமாக தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com