ஐபோன்
ஐபோன்

தள்ளுபடி விலையில் ஐபோன்: எப்போது, எங்கு வாங்கலாம்?

ஐபோன் விற்பனையில் சிறப்பு தள்ளுபடி: வாங்கும் வழிகள் மற்றும் சலுகைகள்
Published on

ஆண்ட்ராய்டு அலைபேசிகள் விதவிதமான மாடல்களில், விலைகளில், வசதிகளில் சந்தையில் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு இருக்கும் மவுசு குறையாதது. ஐபோன் வாங்கத் திட்டமிடுவது பல மாதங்களுக்குச் சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதற்குச் சமமானது.

இந்த நிலையில், ஆன்லைன் விற்பனை தளங்கள் அறிவிக்கும் தள்ளுபடியைப் பயன்படுத்தி வாங்கும்போது பட்ஜெட்டில் கணிசமாக மிச்சம் பிடிக்க இயலும்.

தற்போது ஃபிளிப்கார்டு இணைய விற்பனைதளம் ஐபோன்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனையை தொடங்கியுள்ளது. மார்ச் 30 வரை இந்த தள்ளுபடியை பிளிப்கார்டு அளிக்கிறது.

ஐபோன் 14, 128 ஜிபி மொபைல் ரூ.56,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.69,900. மேலும் யுபிஐ வழியாக போன் வாங்கினால் கூடுதலாக ரூ.750 தள்ளுபடியும் ப்ளிப்கார்டு ஆக்ஸிஸ் வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.2,850 கேஷ்பேக்கும் அளிக்கப்படுகிறது.

அதே போல ஐபோன் 15, 128 ஜிபி மொபைல் ரூ.66,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.79,900. அதே போல ஆக்ஸிஸ் கடன் அட்டையில் இதனை வாங்கும்போது ரூ.3,350 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

ஐபோன் 13 மாடல் ரூ.52,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக ஹெச்டிஎப்சி கடன் அட்டைக்கு ரூ.1000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com