கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

கர்நாடகத்துக்கு போறீங்களா அங்குள்ள ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

ஹாயர் பெனகல் அல்லது ஹாயர் பெனகல்லு என்று அழைக்கப்படும் மெகாலிதிக் காலத்துச் சின்னங்களைக் கொண்ட இடம், கர்நாடகத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது.

வழக்கமான சுற்றுலா தலங்களைப் போல அல்லாமல், முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என இணையதளத்தில் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இவ்விடம் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்துக்கோ அல்லது கர்நாடக மாநிலத்தில் இருந்து அங்குள்ள ஒரு சுற்றுலா தலத்துக்குச் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் நிச்சயம் இவ்விடத்தை தவறவிடாதீர்.

அதாவது, இந்த பழம்பெரும் சின்னங்களின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 800 ஆண்டுகள் முதல் கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோபால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹோஸ்பெட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும் கங்காவதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 400 இறுதிச்சடங்கு நடத்தும் கற்குடில்கள் அமைந்துள்ளன. நியோலிதிக் காலத்திலிருந்து இரும்புக் காலத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த இடம் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 2000 மெகாலிதிக் நினைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை கர்நாடகத்தில் அமைந்துள்ளன. இவ்விடம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துங்கபத்ரா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இவ்விடத்தை அடைவதற்கு பாதையற்ற மலையையும், ஆற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும். அப்படி இங்கு என்னதான் சிறப்பு என்று கேட்டால், அந்தக் காலத்தில் பல்வேறு தேவைகளுக்காகக் கட்டப்பட்ட பல சின்னங்கள் உள்ளன. அதில் ஒன்று இறுதிச்சடங்குக்கான கற்குடில்கள். மிகப்பெரிய கல் பலகைகள் கொண்டு வட்ட வடிவிலும், சதுர வடிவிலும் சின்னச் சின்ன குடில்கள் உருவாக்கப்பட்டுள்ன. இங்கு, உடல்களை எரிக்கும் பணி நடந்துள்ளது. இங்கு இத்தனை காலத்துக்குப் பிறகு நின்றுகொண்டிருக்கும் கற்பலகைகள்தான் அந்தக் கால மக்களின் அறிய செயல்களுக்கு சாட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com