
தேர்வு நேரம் என்பதால், பொதுவாகவே மாணவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் உணவுப்பொருள்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். காரணம் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்படலாம்.
அதுபோல, கோடைக்காலமும் வருகிறது என்பதால் சாலையோரங்களில் விற்பனையாகும் குளிர்பானங்கள், பழச்சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை வாங்கிக் குடிப்பவர்கள் நிச்சயம் அதில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.
அதாவது, ஐஸ் கட்டிகளில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தூளான ஐஸ், பெரிய பெரிய ஐஸ் கட்டிகள். இதில், தூளான ஐஸ் கட்டிகள், பழச்சாறு தயாரிப்போரே குளிர்சாதனப் பெட்டிகளில் தயாரித்தும் கொண்டு வரலாம். பொதுவாக சுத்தமான தண்ணீரில் செய்யப்படும். இதனால் உடலுக்கு ஆபத்தில்லை.
ஆனால், பெரிய ஐஸ் கட்டிகள் எந்தந்த தண்ணீரிலும் தயாரிக்கப்படலாம். இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பாக்டீரியாக்கள் இருக்கலாம். சிறு , குறு நிறுவனங்கள் ஐஸ் கட்டிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன. இவை சுகாதாரமான முறையில் ஐஸ் கட்டிகளை தயாரிப்பதில்லை.
பொதுவாகவே அவ்வப்போது அல்லது எளிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாவோர், இதுபோன்ற ஐஸ் கட்டிகளை தவிர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்க.. சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!
வெறும் தண்ணீர் மட்டுமல்ல, ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கும் இயந்திரங்களும் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டாலும் நோய்த்தொற்றுகள் பரவும். எனவே சாலையோரம் விற்பனையாகும் குளிர்பானங்களைப் பார்த்ததும், அதில் எந்தவிதமான ஐஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்து வாங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.