இப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவு என்பது சத்துமிக்கதாக இருக்கிறதா என்பதைவிட சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறதா என்றே பார்க்கிறோம். அதனாலேயே உடலில் பல்வேறு பிரச்னைகள், அதுவும் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன.
குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாம் 30 - 40 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. உடல் இயக்கம் பெரிதாக இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் போதிய உடற்பயிற்சி செய்யாததுமே இதற்கு காரணம்.
எனவே, உடலை ஆரோக்கியமாக, சரியான எடையில் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.
அந்தவகையில் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு இன்று சர்க்கரை ஒரு மூலக் காரணமாக இருக்கிறது. சர்க்கரை நிறைந்த உணவுகள், செயற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு அல்லது 30 நாள்களுக்கு உணவில் எந்தவகையிலும் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் உடலில் பல அதிசயங்கள் நிகழும் என்று கூறுகிறார்கள்.
உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?
முதல் வாரத்தில் உடலானது, டோபமைன் அளவுகளை மறுசீரமைத்துக் கொள்ளும். முதல் வாரம் என்பதால் சர்க்கரை உணவுகளைச் சாப்பிடாததால் தலைவலி, எரிச்சல், தீவிரமான ஏக்க உணர்வுகள் ஏற்படலாம். ஆனால் அதைக் கடந்து வந்துவிட்டால் மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் உணர முடியும்.
2-ம் வாரத்தில் ரத்த சர்க்கரை அளவு சீராகத் தொடங்கி உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், புத்துணர்ச்சியை உணர்வீர்கள், நல்ல தூக்கம் கிடைக்கும். ரத்த அழுத்தமும் சீராகும்.
3 ஆவது வாரத்தில் சர்க்கரை மீதான ஆசை குறையும், மனநிலை சீராகும். அது மட்டுமன்றி கல்லீரல், இதயம், செரிமான உறுப்புகளில் உள்ள பிரச்னைகள் படிப்படியாக குறையத் தொடங்கி உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
4 ஆவது வாரத்தில் உடலில் அழற்சி குறைகிறது, ஹார்மோன்கள் சமநிலை அடைகின்றன, தெளிவான சருமத்தையும் உடல் எடை குறைவதையும் காணலாம். இத்துடன் சிறிதளவு உடற்பயிற்சியும் மேற்கொள்ளும்போது உடல் எடையில் மேலும் மாற்றங்கள் நிகழும்.
சர்க்கரையால் மன அழுத்தம், பதற்றம் ஆகியவை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எதைத் தவிர்க்க வேண்டும்?
சர்க்கரையைத் தவிர்ப்பது என்றால் சர்க்கரை, வெல்லம், தேன், கருப்பட்டி போன்ற சர்க்கரை நிறைந்த பொருள்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளிலும் செயற்கை பானங்களிலும் இனிப்புகள் இருக்கும். அந்த பொருள்களை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், சாஸ் ஆகியவற்றையும் நொறுக்குத் தீனிகள், பிஸ்கட், ரொட்டி என அனைத்து பேக்கரி உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
இனிப்புள்ள எந்த பானங்களையும் அருந்தக்கூடாது. ஐஸ்க்ரீம், சாக்லேட்டும் சாப்பிடக் கூடாது.
எதைச் சாப்பிட வேண்டும்?
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். அனைத்து வகையான பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம்.
கோழி, மீன், முட்டை ஆகிய புரத உணவுகள் சாப்பிட வேண்டும்.
நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் இளநீர், மூலிகை தேநீர் போன்ற இயற்கை பானங்கள் சாப்பிடலாம்.
பால், சர்க்கரை இல்லாத தேநீர் அருந்த வேண்டும்.
Summary
No sugar diet for 30 days: Do you know what happens in our body
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











