வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மணப்பாடு பறவைகள் சரணாலயம்!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் செங்கால் நாரை, வண்ண நாரை, வெள்ளை நாரை எனப் பல பறவைகள் இப்பகுதிக்கு வந்துள்ளன.

News image

மணப்பாடு கடற்கரையோரம் சிறகடித்துப் பறக்கும் பறவைகள்.

Updated On :25 நவம்பர் 2016, 5:13 am

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரையோரம் ஆயிரக்கணக்கான அழகிய வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்திருப்பது இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கையான அழகிய மணல் குன்றுகள், பரந்து விரந்த நீண்ட கடற்கரை, ஓங்கி உயர்ந்த கலைநுட்பம் மிக்க கிறிஸ்தவ ஆலயங்கள், கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள அழகிய வீடுகள் எனப் பார்க்கும் இடம் எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்துள்ளது மணப்பாடு கிராமம்.
இயற்கை அன்னை வரைந்த அழகிய எழில் ஓவியம்போலக் காணப்படும் இந்தக் கிராமத்தில் தற்போது அழகிய வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து அங்கும் இங்குமாக பறந்த வண்ணம் உள்ளது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இப்பறவைகளைக் காண சுற்றுப் பகுதி ஊர் மக்களும் திரண்டு வருகின்றனர். இதுகுறித்து மணப்பாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரூபஸ் கூறும்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் செங்கால் நாரை, வண்ண நாரை, வெள்ளை நாரை எனப் பல பறவைகள் இப்பகுதிக்கு வந்துள்ளன. முன்பு இதுபோல நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன. அதிகளவில் பறவைகள் வந்திருப்பது இதுவே முதல்முறை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.