239 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவர் அடி எடுத்து வைத்தால், முதுகலை பட்டம் மட்டும் அல்ல, அதற்கு மேலும் பெற்று வெளியே வரலாம். காரணம், இங்கே படிக்கலாம், தங்குவதற்கு விடுதிகள் உள்ளன, ஒலிம்பிக் நிர்ணயம் செய்த அளவு நீச்சல் குளம் உள்ளது. தடகள மற்றும் விளையாட்டு துறை சம்பந்தமான எல்லா வசதிகளும் இங்கு இருக்கிறது. மாணவர்களுக்கு உபயோகமாக இருக்க உள்ளேயே புத்தகக் கடையும், வங்கியும் கூட உண்டு. இன்னும் சொல்லப் போனால் தங்களது வீட்டிற்கோ அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் கடிதமோ, அல்லது மற்ற பொருள்களை அனுப்ப ஏதுவாக கொரியர் வசதியும் கூட அமைய பெற்றது தான் இந்தப் பல்கலைக்கழகம்.