காமெடி சேனல்கள் போர் அடிக்கையில் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதமளிக்கும் ட்ரால்கள்!

இந்த வகையான ட்ரால்கள் சம்மந்தப்பட்ட ஒரிஜினல் புராடக்டுகள் மற்றும் விளம்பரங்களைப் பெரிதாக டேமேஜ் செய்வதில்லை. ஆனால் வெடிச்சிரிப்புக்கு மட்டும் 100 % உத்தரவாதமுண்டு. 
காமெடி சேனல்கள் போர் அடிக்கையில் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதமளிக்கும் ட்ரால்கள்!
Published on
Updated on
1 min read

நாள்தோறும் நம் பார்வையில் படக்கூடிய விளம்பரங்கள் தான். ஆனால் அவற்றை எந்த விதமான சிரத்தையும் இன்றி கண்டும் காணாமல் அவற்றிலுள்ள லாஜிக் மீறல்களை எல்லாம் பெரிது படுத்தாமல் கடந்து விடும் அப்பாவி தொலைக்காட்சி நேயர்களான நமது ரசனையை எள்ளி நகையாடுகின்றனர் இந்த விளம்பர ட்ராலர்கள்.  

கீழே உள்ள வீடியோ காட்சியைப் பாருங்கள் நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்! என்பது போல உதாரணத்துக்கு அளிக்கப் பட்ட கிளிப்பிங். யூ டியூபில் லட்சக்கணக்கில் இம்மாதிரியான ட்ரால்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றில் கோல்கேட்டை டோல்கேட் என்றும், காட்பரி டெய்ரி மில்க்கை, பேட்பர்ரி டெய்ரி மில்க் என்றும், பதஞ்சலி புராடக்டுகளை பாஞ்சாலி புராடக்டுகள் என்றும் Axe பெர்ஃபியூமை Oxe என்றும், சரவண ஸ்டோர்ஸை வரவணா ஸ்டோர்ஸ் என்றும் கலாய்த்து இவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த ட்ரால்கள் ஒவ்வொன்றுமே அதிரடி சிரிப்புக்கு அட்டகாசமான உத்தரவாதம் தருகின்றன. 

தொலைக்காட்சி காமெடி சேனல்கள் பார்த்து அலுத்துப் போனவர்கள் கொஞ்சம் இப்படிப்பட்ட வீடியோக்களையும் பார்த்து ரசித்து தங்களது பொது அறிவை விருத்தி செய்து கொள்ளலாம் :) இந்த வகையான ட்ரால்கள் சம்மந்தப்பட்ட ஒரிஜினல் புராடக்டுகள் மற்றும் விளம்பரங்களைப் பெரிதாக டேமேஜ் செய்வதில்லை. ஆனால் வெடிச்சிரிப்புக்கு மட்டும் 100 % உத்தரவாதமுண்டு. 

அது மட்டுமல்ல, ட்ரால்கள் என்பவை வெறுமே ஒரிஜினலை பகடி செய்து சம்மந்தப்பட்டவர்களின் மனதை நோகடிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படாமல் அதைக் கண்ட மாத்திரத்தில் காண்பவர்களின் உச்ச பட்ச மன அழுத்தத்தை குறைக்கும் விதத்திலும் அதே சமயம் சிற்சில லாஜிக் மீறல்களை நாகரீகமாக சுட்டிக்காட்டக் கூடியவையுமாக இருந்தால் அவை பார்வையாளர்களின் மிகச் சிறந்த 'ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர்கள்' என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com