தினமணிக்கு அமெரிக்க வாசகர் எழுதிய கடிதம்...

தனது தீவிர வாசகர்களது நம்பிக்கையையும், வேண்டுகோள்களையும் தினமணி எப்போதும் நிராகரிப்பதில்லை
தினமணிக்கு அமெரிக்க வாசகர் எழுதிய கடிதம்...
Published on
Updated on
2 min read

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி, தேசிய கையெழுத்து தினத்தை ஒட்டி வாசகர்களிடையே தினமணி ஒரு வேண்டுகோளை முன் வைத்தது. வாசகர்களின் எவருக்கெல்லாம் ஆர்வமுண்டோ அவர்கள், தங்களது சொந்தக் கையெழுத்தில் தங்களது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ அல்லது தினமணிக்கோ ஒரு கடிதம் எழுதி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று வாசகர்கள் பலரும் தங்களது சொந்தக் கையெழுத்தில் எழுதிய கடிதங்களை எங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவற்றைத் தினமொன்றாக தினமணி இணையதளத்தில் தற்போது பிரசுரித்துக் கொண்டிருக்கிறோம்.  அந்த வகையில் இன்றைய கடிதம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவரால் தினமணிக்கு எழுதப்பட்டுள்ளது.

தினமணிக்கு அமெரிக்க வாசகர் எழுதிய கடிதம்...

இந்த வாசகரது கடிதத்தை வாசிக்கும் போது உணர்ந்தது.  இப்படியான வாசகர்களே தினமணியின் ஆன்மா போன்றவர்கள்! 

தனது தீவிர வாசகர்களது நம்பிக்கையையும், வேண்டுகோள்களையும் தினமணி எப்போதும் நிராகரிப்பதில்லை. மாற்று அரசியலுக்கான தேவை இப்போது தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது. தவிரவும் தலைநகரில் விதம் விதமாக எத்தனை போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளும் தீர்ந்தபாடில்லை. இந்த இரு தலையாய பிரச்னைகள் குறித்தும் தினமணி தனது தலையங்கங்களிலும், நடுப்பக்க கட்டுரைகள் மற்றும் இணையதளச் சிறப்புக் கட்டுரைகள் வாயிலாகவும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் தமிழின் சிறந்த படைப்பாளிகள் வாயிலாகத் தனது சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த முயற்சி படைப்பாளிகள் மற்றும் வாசக ஆதரவுடன் மேலும் தொடரும்  தினமணி உறுதியளிக்கிறது. 

நன்றி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com