எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?!

சின்னத்திரை மெகா சீரியல்கள் குறித்தான பொதுவான எதிர்மறை கருத்துக்களை இந்த நேர்காணலில் தன் பாணியில் கட்டுடைப்பதோடு நடிகர்களின் அரசியல்பிரவேசத்தையும் லாஜிக்குடன் வேடிக்கையாகக் கலாய்த்து காலி செய்கிறார். 
எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?!
Published on
Updated on
1 min read

எழுத்தாளர் பா. ராகவனுடனான தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல். வெகுஜனப் பத்திரிகை உலகில் தமது தடங்களை அழுத்தமாகப் பதித்து வந்த பாரா தமிழ் இலக்கிய உலகிலும் இதுவரை நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள் வாயிலாக தமது அடையாளத்தை வெகு ரசனையுடன் பதிவு செய்து வந்திருக்கிறார். சின்னத்திரையிலும் கெட்டிமேளம், வாணி, ராணி என இவரது பங்களிப்பு தொடர்கிறது. ஒரு மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சின்னத்திரை, பெரிய திரை வசனகர்த்தா என ஊடகப் பரப்பில் அவர் பயணித்துக் கொண்டிருக்கும் எல்லைகள் எங்கெங்கும் வியாபித்துக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன.

குழந்தைப் பருவத்தில் ஒரு ரெளடியாகவோ அல்லது துறவியாகவோ ஆக நினைத்ததாக தன்னைத் தானே பகடி செய்து கொண்டு பாரா பேசுவது வேடிக்கையாக இருந்தாலும் அவரது ஆசையின் வெளிப்பாடு தான் இன்று அவர் இன்று எழுதிக் கொண்டிருக்கும் ‘யதி’ எனும் பெருநாவலுக்கான களம் என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு எழுத்தாளராக தனது எழுத்தில் ‘நோ காம்ப்ரமைஸ்’ செய்து கொள்ளாத பாரா, சின்னத்திரை மெகா சீரியல்கள் குறித்தான பொதுவான எதிர்மறை கருத்துக்களை இந்த நேர்காணலில் தன் பாணியில் கட்டுடைப்பதோடு நடிகர்களின் அரசியல் பிரவேசத்தையும் லாஜிக்குடன் வேடிக்கையாகக் கலாய்த்து காலி செய்கிறார்.

அவருடனான நேர்காணல் வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

நேர்காணலுக்கான முன்னோட்டம் இதோ...

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com