மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள்? தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை!

பகிரப்படும் உங்களது அனுபவங்களில் சிறந்தவை 24.07.19 அன்று தினமணி.காம் லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பகுதியில் வெளியிடப்படும்.
மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள்? தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை!
Published on
Updated on
1 min read

தினமணி.காமில் இன்று ஒரு செய்தி வெளியானது. செய்தி நட்டநடுக் கடலில் மீன்பிடிப் படகு புயலில் சிக்கி கவிழ அதில் பயணித்த 14 பேரில் மற்ற அனைவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே ஒரு மீனவர் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் ஒரு மூங்கில் கழியைப் பற்றிக் கொண்டு மிகுந்த மன உறுதியுடன் கடலில் மிதந்து உயிர் தப்பினார். அவரை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த வங்கதேசக் கப்பலொன்று காப்பாற்றி கரை சேர்த்தது.

இந்தச் செய்தியை வாசிக்கும் போது தோன்றியது. 

இது போன்ற அனுபவங்கள் அரிதானவை.

இதே போன்ற அனுபவங்கள்... அதாவது தொழில் நிமித்தமோ அல்லது யதேட்சையாகவோ எக்குத் தப்பாக பேராபத்தில், பேரிடரில் மாட்டிக் கொண்டு விடா முயற்சி மற்றும் மன உறுதியை மட்டுமே துணையாகக் கொண்டு உயிர் பிழைத்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். அந்த அனுபவங்களை எல்லோராலும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்திருக்க முடியாது. சிலர் இன்னும் கூட மனதுக்குள் வைத்துக் கொண்டு மருகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு.

உங்கள் வாழ்விலும் இப்படியோர் மயிர்கூச்செறியச் செய்யும் அனுபவமொன்றை நீங்கள் கடக்க நேர்ந்திருந்தால், அந்த அனுபவம் அதை வாசிப்பவர்களுக்கு படிப்பினைகளையும், மன உறுதியையும் தரக்கூடுமென நீங்கள் நம்பினால் தயவு செய்து தினமணி.காமில் உங்கள் பெயர், முகவரி, புகைப்படத்துடன் பகிருங்கள்.

பகிரப்படும் உங்களது அனுபவங்களில் சிறந்தவை 24.07.19 அன்று தினமணி.காம் லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பகுதியில் வெளியிடப்படும்.

அனுபவக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dinamani.readers@gmail.com

கட்டுரைகள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 23.07.19
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com