ஒட்டகச் சிவிங்கிக்கு பிரசவம் பார்க்கறதுன்னா சும்மாவா? குட்டி 5 அடி உயரம், 30 கிலோ எடையாக்கும்!

இந்த ஜிராஃபி பொறந்ததுல அப்படி என்ன அதிசயம்னு கேட்டீங்கன்னா, ஜிராஃபிங்க எல்லாம் இனப்பெருக்கம் செய்யனும்னா அதுங்க சுதந்திரமா காட்ல திரிஞ்சா தான் அது சாத்தியமாகும். கூண்டுல அடைச்சு வச்சா அவை இனப்பெருக்கம
ஒட்டகச் சிவிங்கிக்கு பிரசவம் பார்க்கறதுன்னா சும்மாவா? குட்டி 5 அடி உயரம், 30 கிலோ எடையாக்கும்!

ஹைய்யோ நீ தான் எத்தனை அழகு... ஹேப்பி பெர்த்டே ஜிராஃபி குட்டி!

மனுஷக்குட்டிங்களுக்கு பெர்த்டேன்னா மட்டும் தான் ‘ஹேப்பி பெர்த் டே’ சொல்லனுமா என்ன? இதோ... இந்த அழகான ஒட்டகச் சிவிங்கி குட்டி இன்னைக்கு தான் பிறந்திருக்கு. இதுக்கும் ஒரு பெர்த்டே சாங் பாடி வைப்போமே, பார்க்க எவ்ளோ அழகா இருக்கு பாருங்க. 

விசாகபட்டிணம், இந்திரா காந்தி உயிரியல் பூங்கால புத்தம் புதுசா  போன திங்கட்கிழமை அன்னைக்கு காலைல 11.30 மணிக்கு பொறந்ததாம் இந்த ஒட்டகச் சிவிங்கி அலைஸ் ஜிராஃபி. இதோட அம்மா, அப்பா பேரு மாய் & பீக்கான். இந்த ரெண்டு பெரிய ஜிராஃபிங்களையும் கோலாலம்பூர் நெகாரா உயிரியல் பூங்கால இருந்து 2012 ஆம் வருஷம் ஒரு நல்ல நாள் பார்த்து இந்தியால விசாகப்பட்டிணத்துல இருக்கற இந்திரா காந்தி உயிரியல் பூங்காக்கு கூட்டிட்டு வந்தாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த இந்த குட்டி ஜிராஃபி பொறக்கும் போதே 30 கிலோ எடையும், 5 அடி உயரமுமா இருந்தது பார்க்கப் பார்க்க அத்தனை அழகோ அழகு!

இந்த ஜிராஃபி பொறந்ததுல அப்படி என்ன அதிசயம்னு கேட்டீங்கன்னா, ஜிராஃபிங்க எல்லாம் இனப்பெருக்கம் செய்யனும்னா அதுங்க சுதந்திரமா காட்ல திரிஞ்சா தான் அது சாத்தியமாகும். கூண்டுல அடைச்சு வச்சா அவை இனப்பெருக்கம் செய்ய சாத்தியப்படாம இருந்தது பல காலமா! அந்த நிலையை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமா மாத்தி அமைச்சு கட்டுப்படுத்தப்பட்ட இடங்களிலும் கூட ஜிராஃபி மாதிரியான காட்டு விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய வைக்க முடியும்னு நம்முடைய உயிரியல் வல்லுனர்கள் நிரூபிச்சிருக்காங்க. அந்த வகையில் இந்தியாவைப் பொருத்தவரை இது அவங்களுக்கு கிடைச்ச 4 ஆவது வெற்றி. இதுக்கு முன்னால கொல்கத்தா அலிப்பூர் சரணாலயம், மைசூர் சாமராஜேந்திரா உயிரியல் தோட்டம், பாட்னா விலங்குகள் நலப்பூங்கான்னு மொத்தம் 3 இடங்களில் அதை சாத்தியப்படுத்தி இருந்தாங்க. ஸோ... விசாகபட்டிணம் உயிரியல் பூங்காவோட சேர்த்தா அந்த லிஸ்ட்ல இப்போ மொத்தம் 4 இடங்கள் இருக்கு.

எல்லாம் சரி தான். ஜிராஃபி பொறந்துட்டதால மட்டும், இந்த முயற்சி வெற்றின்னு சொல்லிட முடியாது. குறைந்த பட்சம் 1 மாசமாவது அந்த குட்டி ஜிராஃபியை தொடர் கண்காணிப்புல வச்சு அது நார்மலா இயங்குதான்னு சோதிச்சுக்கிட்டே இருக்கனும். ஐ மீன் கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்க முறையைப் பொருத்தவரை, குட்டி ஜிராஃபி அதோட அம்மா மடியை முட்டி பால் குடிக்கிறது கூட அதிசயமான முன்னேற்றம் தான்னு சொல்றாங்க IGZP அனிமல் க்யூரேட்டர் யசோதா பாய்.

‘மாய்’ அதாங்க குட்டி ஜிராஃபியோட அம்மா, அது கருவுற்றதை தெரிஞ்ச அடுத்த நிமிஷமே எங்க உயிரியல் பூங்காவைச் சேர்ந்த விலங்குகள் நல வாரிய பணியாளர்கள் சிலரை மைசூர், கொல்கத்தால இருக்கற உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பி அங்கேயெல்லாம் ஜிராஃபி கருவுற்றா என்ன்னென்ன விதமான தாய்சேய் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எல்லாம் அவங்க ஈடுபடறாங்கன்னு பொறுமையா உட்கார்ந்து கத்துக்கிட வச்சோம். அவங்க திரும்ப வந்ததும் நாங்க எல்லோருமே அவங்க கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களின் அடிப்படையில் அம்மா ஜிராஃபி பிரசவிக்கிறதுக்காக 15 மாசம் காத்திருந்தோம். ஆமாம், ஜிராஃபிங்களோடு கர்ப்ப காலம் சுமார் 15 ல இருந்து 17 மாதங்கள் வரையிலும். ஸோ நாங்க வெயிட் பண்ணோம். ஜிராஃபிங்களைப் பொருத்தவரை பிரசவம் நெருங்க நெருங்க அதுக்கு மனுஷங்க மாதிரியே சோறு தண்ணீ இறங்காதுன்னு தெரிஞ்சுகிட்டோம். அதே மாதிரி ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னால் மாய்க்கு அப்படி ஆச்சு. நாங்க உடனே எங்க கால்நடை மருத்துவர்களை தயார் நிலையில் வச்சிருந்தோம். பிரசவ வலி வந்து ஒரு மணி நேரத்துக்குள்ளயே குட்டி ஜிராஃபி ஜம்முன்னு வெளில வந்துடுச்சு. ஒருவேளை 5 மணி நேரமாயிருந்தா அது ரேர் கேஸ் ஆயிருக்கும். 

இங்கே அந்த கஷ்டமெல்லாம் நேரலைன்னாலும், இங்கயும் ஒரு சின்ன பிரச்னை இருக்கு. குட்டி பொறந்ததுமே அன்பான அம்மாவா, குட்டியை நக்கி தன்னோட பாச உணர்வை வெளிப்படுத்தின மாய், என்ன காரணத்தாலயோ அதுக்குப் பாலூட்ட மறந்துட்டது. அது இயல்பான நிலைமை இல்லையே. ஏன்னா, மதர்குட்னா என்ன, குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய எந்த ஒரு உயிரிலுமே அம்மாக்களுக்கு இருக்கற ஸ்பெஷல் பண்பு அது, குட்டி பொறந்து மண்ணுல விழுந்த அடுத்த நிமிஷமே அம்மா, அதுக்கு பால் ஊட்ட ஆரம்பிச்சிடும். இங்க அது இன்னும் நடக்கல. இது என்னடா சோதனைன்னு உடனே மைசூர் ஜூவுக்கு ஃபோனைப் போட்டோம், அவங்க தான், சும்மா பயப்படாதீங்க, இப்படியும் சில நேரங்களில் ஆயிடறதுண்டு. அதனால பரவாயில்லை இப்போதைக்கு  பொவைன் கொலஸ்ட்ரம் கொடுங்க குட்டிக்கு... கொஞ்ச நாள்ல சரியாயிடும்னு சொன்னாங்க. 

ஸோ... இப்போ குட்டி பொறந்த சந்தோஷம் நிறைய இருந்தாலும், அடுத்தபடியா அது எப்போ அம்மா மடிய முட்டிப் பால் குடிக்கப் போகுதோன்னு எதிர்பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் என்கிறார் யசோதா பாய்.

ரைட்டு... பிரசவம்னா அப்படித்தான். பல சிக்கல் இருக்கும்.

கடைசில குழந்தை பிறந்து, பால் குடிச்சு ஏப்பம் விட்டு சரியா மலம் கழிச்சா போதும் அம்மா முகத்துல நிமிஷத்துல பரம நிம்மதி பரவிடும். அதே ஃபார்முலா தான் இந்த குட்டி ஜிராஃபிக்கும். சீக்கிரமே அம்மா மடில பால் குடிக்கனும்னு சாமியை வேண்டிக்கோங்க.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com