சரி என்னதான் செய்ய வேண்டும் அவர்கள் நமது பேச்சைக் கேட்க என்றால்..
அவர்கள் தவறு செய்தாலும் அப்போது அது குறித்து திட்டாமல் விடுவது அல்லது மன்னித்து விடுவதாகக் கூறுவது..
செல்லிடப்பேசியை எப்போதும் கையில் வைத்திருப்பது குறித்து அவர்களை கடிந்து கொள்ளாமல், அதைக் குறைக்க வேறு வழிகளை நீங்களே கண்டடைதல்.
அவர்களுக்கு ஓவியம் வரைதல், தோட்டம் அமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஆர்வமிருந்தால், அதற்குப் பழக்கப்படுத்தலாம்.
தற்போது வீட்டிலிருக்கும் பிள்ளைகள், சமையலில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதையும் செய்யப் பழக்கலாம்.
அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்து, அந்தப் பேச்சு சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கும் போது, அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களைச் சொல்லலாம். அப்போது அவர்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்க வாய்ப்பிருக்கிறது.
ஒரு அறிவுரை என்றால் அதை ஒரே வாக்கியத்தில் முடித்துவிடுங்கள்.
நீங்கள் அறிவுரை கூறும்போது சரி, செய்கிறேன் என்று அவர்கள் சொல்லிவிட்டால், அந்த அறிவுரையை அத்தோடு நிறுத்திவிடுங்கள். அதற்கு மேல் அதைத் தாங்க முடியாது என்பதே அந்த சரி, செய்கிறேன் என்பதன் அர்த்தம்.
ஒரு விஷயத்தை நீங்கள் சொல்ல வேண்டும் என்றால், அது குறித்து யூ-டியூப்பில் ஏதேனும் விடியோ வந்திருக்கிறதா என்று பாருங்கள். அதை அவர்களுக்கு அனுப்பி பார்க்க வைக்கலாம். (அடிக்கடி தண்ணி குடிக்க வேண்டும் என்பது முதல்)
எதையும் நாம் சொல்வதை விட, இப்படி தெரிந்து கொண்டு பின்பற்றுவதற்கு பிள்ளைகள் விரும்புகிறார்கள். (வேறு வழியில்லை)