ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மனமுடைந்திருக்கும் போது இதைச் செய்து பாருங்கள்! 

உறவில் விரிசல் அல்லது வேறு ஏதோ சிக்கல் காரணமாக மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களைத் தேற்ற முடியாமல் களைப்படைகிறீர்களா?

மனமுடைந்திருக்கும் போது இதைச் செய்து பாருங்கள்!

Published On :28 ஜனவரி 2024, 1:06 am IST


உறவில் விரிசல் அல்லது வேறு ஏதோ சிக்கல் காரணமாக மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களைத் தேற்ற முடியாமல் களைப்படைகிறீர்களா? அதற்கு எளிதான ஆனால் கொஞ்சம் செலவு பிடிக்கும், அதே வேளையில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இருக்கிறது.

இதை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், இதற்கு ஆய்வு எல்லாம் தேவையில்லைங்க.. நீங்களும் நானுமே இதற்கு பல சாட்சிகளாக இருப்போம்.

வாருங்கள் அப்படி என்னத்தான் சொல்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள் என்று பார்க்கலாம்.

அதாவது, மனமுடைந்து காணப்படும் போது, கோயிலுக்கோ, அமைதியாக தியானம் செய்யவோ போவது ஒரு வழியில் நல்லது என்றாலும், உங்கள் மனநிலையை அப்படியே மாற்றிவிடும் வாய்ப்பு குறைவு. எனவே உங்களுக்குப் பிடித்த நண்பர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் அல்லது தனியாக ஷாப்பிங் சென்று விடுங்கள்.. இதுதான் அந்த நல்ல யோசனை.

உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது வாங்க வேண்டும் என்று வெகு நாள்களாக நினைத்துக் கொண்டிருந்த, அல்லது வாங்காமல் இருப்பதால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பொருள்களை பட்டியலிட்டுக் கொண்டு கிளம்பி விடுங்கள்.

Story image

இது குறித்து மார்க்கரட் மெலோய் மற்றும் செலின் அதாலே ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், உங்கள் மனநிலையை உற்சாகக் கடலில் ஆழ்த்தும் திறன் இந்த பல பொருள்களை பார்த்தும் வாங்கும் போது அதிகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது மட்டுமல்ல, வீட்டுக்குத் தேவையான ஏதோ ஒரு பொருளை வாங்கும்போது, ஒரு கடைக்குச் சென்று என்னென்ன வாங்க வேண்டும், அதனை எங்கு வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் என யோசித்து அதில் ஒரு நல்ல முடிவு கிடைத்து, நல்ல பொருளை வீட்டுக்கு வாங்கி வரும் போது உங்களுக்கே உங்கள் மீது ஒரு நல்ல மதிப்பு வரும், ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.

வெகு நாளாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்கி வரும் போது நிச்சயம் மகிழ்ச்சி ஏற்படும். அதனைப் பயன்படுத்தும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

அப்போது நீங்கள் எதை நினைத்து இத்தனை காலம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அழுது கொண்டிருந்தீர்களோ அது சிறியதாகவும் போகலாம். வேண்டாத வேலையாகக் கூட மாறலாம். யாருக்குத் தெரியும்.

நீங்கள் கடை வீதிக்குச் சென்று வாங்குவது மிகச் சிறிய பொருளாகவும் இருக்கலாம், கார், வைர மோதிரம் போன்ற பெரிய பொருளாகவும் இருக்கலாம். அது அது அவரவர் பணப்பையின் கனத்தைப் பொருத்தது. 

ஆனால் தயவு செய்து கடன்வாங்கி இதையெல்லாம் வாங்கிவிடாதீர்கள். அப்புறம் கடனிலிருந்து மீள்வது எப்படி, அந்த மனக்கஷ்டத்தை போக்குவது எப்படி என்று மற்றொரு கட்டுரையைப் படிக்க வேண்டியதிருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.