தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்! ஏன்?

உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
exercise
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நோய்கள் அதிகரித்து வருவதால் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

அந்தவகையில், சிலர் வயதானாலும் அழகாகவும் இளம் தோற்றத்துடன் இருக்கிறார்கள். மிகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கேட்டால் அவர்களது வாழ்க்கை முறைதான்.

உடலும் மனமும் சரியாக இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்தால் அழகு தானாக வந்துவிடும்.

30 வயது ஆகிவிட்டாலே உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், மாறிவரும் வாழ்க்கைச் சூழலால் நோய்கள் அதிகரித்து வருகின்றன.

exercise
நீங்கள் ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா? அதிகரிக்கும் திடீர் செவித்திறன் இழப்பு! தடுப்பது எப்படி?

அந்தவகையில் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்று.

நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி, நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. தசைகளை வலுவாக்க உதவுகிறது.

மேலும், உங்கள் உடலை லகுத்தன்மையுடன் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

பெரும்பாலாக இன்றைய நமது வேலையில் உடல் இயக்கம் குறைந்து காணப்படுவதால், அதாவது உட்கார்ந்தே வேலை செய்வதால் உடலில் கொழுப்புகள் தேங்குகிறது. இன்று அதிகம் பேருக்கு உடல் பருமன் ஏற்படக் காரணம் இதுதான்.

exercise
இந்த 7 உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது!

உங்கள் உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் உடற்பயிற்சியை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம்.

நடத்தல், ஓடுதல், சைக்கிளிங் என உங்களுக்கு எது சௌகரியமோ உங்களால் எது முடியுமோ அதனை பின்பற்றலாம்.

தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு என, உங்கள் உடல்நலத்துக்கு என ஒதுக்குங்கள்.

உங்கள் உடல்நிலை சரியாக இருக்கும்போது ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்.

அதுபோல உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு உடல்நல பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

மூன்று, நான்கு வாரங்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்யும்போது அதைத் தொடர்வது எளிதாக இருக்கும்.

உடற்பயிற்சிக்கு பதிலாக நடனப் பயிற்சியில் கூட ஈடுபடலாம்.

அதுபோல உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு உடல்நல பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

அதுபோல நல்ல உடல்நலனுக்கு யோகா செய்யலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீண்ட கால நன்மைகளை அளிக்கும். இது

உடல் மற்றும் மனத்தின் சமநிலையை மேம்படுத்தவும், மூட்டுகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது மற்றும் நாள்பட்ட வலியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com