அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் பொறுப்பை கிராமக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி பிரபலமானது. இதில் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் கிராமக் குழு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், மாவட்ட நிா்வாகத்தால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அவனியாபுரம் ஊா் பொதுமக்களால் ஜல்லிக்கட்டு விழாக் குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான பொறுப்பை, புதிய விழாக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அவனியாபுரத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யா - 50! இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


