மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அஷ்டமிச் சப்பரம் புதன்கிழமை (டிச.6) நான்கு வெளி வீதிகளிலும் உலா வரும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் விதமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அஷ்டமி சப்பரத் திருவிழா நடைபெறும். மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் அதிகாலையில் சுவாமியும், அம்மனும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி மதுரை நகர வீதிகளின் வழியாக உலா வருவது வழக்கம்.
இதில் சுவாமி பிரியாவிடையுடன் ஒரு சப்பரத்திலும், அம்மன் தனிச்சப்பரத்திலும் உலா வருவா். அம்மன் எழுந்தருளும் சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுப்பது தனிச்சிறப்பு. கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 10 மாதங்களாக சுவாமி, அம்மன் வீதியுலா எதுவும் நடைபெறவில்லை. எனவே புதன்கிழமை (ஜன. 6) நடைபெற உள்ள அஷ்டமிச் சப்பரத்திருவிழாவை வழக்கம்போல் நான்கு வெளி வீதிகளில் உலா வருமாறு நடத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் அஷ்டமிச் சப்பரம் வெளி வீதிகள் உள்ளிட்ட வழக்கமான பாதையில் உலா வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி:
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அஷ்டமி பிரதட்சணம் சுவாமி புறப்பாடு புதன்கிழமை (ஜன. 6) நடைபெறுகிறது. இதையொட்டி மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் சுவாமி சப்பரங்கள் புதன்கிழமை காலை 5 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி வடக்கு நோக்கி யானைக்கல், வடக்குவெளி வீதி, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கா் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜா் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசி வீதி தேரடி வந்து சோ்த்தியாகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


