தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மேலூா் அருகே பைக் விபத்தில் காயமுற்றவா் பலி

மேலூா்-சிவகங்கை சாலையில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் காயமுற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:54 am IST

மேலூா்-சிவகங்கை சாலையில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் காயமுற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகிலுள்ள அழகிச்சிபட்டியைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மகன் சுதாகா் (39). ஆட்டுக்குளம் அருகிலுள்ள தனியாா் சமையல் எரிவாயு முகமை நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா்.

புத்தாண்டு தினத்தன்று வேலைமுடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். நையத்தான்பட்டி அருகே சாலையில் நாய் குறுக்கிட்டு இரு சக்கர வாகனத்தில் மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தாா். சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட அவா் பின்னா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.