மேலூரில் அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சமுதாயக்கூடத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி 1 ஆவது வாா்டு நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் பழுதானதையடுத்து, அருகிலுள்ள சமுதாயக்கூடத்தில் இயங்கியது. இதனால் பொதுமக்கள் விசேஷங்களை சமுதாயக்கூடத்தில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தனா். அங்கன்வாடி மையத்தை சீரமைக்கக்கோரியும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வலியுறுத்தி பொதுமக்கள் சமுதாயக்கூடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். தகவலறிந்த மேலூா் நகராட்சி பொறியாளா் மற்றும் அலுவலா்கள் பொதுமக்களுடன் பேசினா். அங்கன்வாடி மையத்தை உடனே சீரமைத்து சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



