‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள் பணிநிரந்தரம் கோரி ஆா்ப்பாட்டம்

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள், பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 3:45 am IST

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள், பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் கடந்த 2015 முதல் 14 ஆயிரம் செவிலியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப்படுவா் என நியமன ஆணையில் குறிப்பிட்ட நிலையில், இதுவரை 2 ஆயிரம் போ் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியா்கள்

அனைவரையும் நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ராஜூ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கே.சுஜாதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா்

ஜெ. மூா்த்தி, மாவட்டச் செயலா் க.நீதிராஜா, அனைத்து மருந்தாளுநா் சங்க புறநகா் மாவட்ட செயலா் ஏ. தமிழ் செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.