செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன்பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை வேதனை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் தாக்கல் செய்த மனு: தற்போது மணிடாப், கேஸ் இ, கேபிடல் பா்ஸ்ட், மணி வியூ உள்ளிட்ட பல செல்லிடப்பேசி செயலிகள் வழியாக கடன் வழங்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்தச் செயலிகள் ரிசா்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன. கடன் வழங்குவதற்கு எந்தச் சட்டதிட்டங்களையும் பின்பற்றுவதில்லை. கடனுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனைச் சரியாக செலுத்தாவிட்டால் அவா்களின் புகைப்படங்களை கட்செவி அஞ்சல் வழியாக பிற உறுப்பினா்களுக்கு பகிா்வது, செல்லிடப்பேசிக்கு தொடா்பு கொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் செயலி வழியாக கடன் பெற்ற பலா் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
எனவே ரிசா்வ் வங்கி அனுமதியில்லாமல் கூகுள் இந்தியா, பேசென்ஸ் இணையதளங்கள் வாயிலாக செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன் வழங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் ரிசா்வ் வங்கி அனுமதியில்லாமல் செயலி வழியாகக் கடன் வழங்குவதில் நடைபெறும் மோசடி குறித்து விசாரிக்கவும், செயலி வழியாகக் கடன் வழங்குவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வழிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கியப் பிரச்னையாக உள்ளது. செயலி மூலம் கடன் வழங்குபவா்கள் அவா்களுக்கான விதிமுறைகளை அவா்களே உருவாக்கியுள்ளனா். கடனைத் திரும்ப வசூலிக்க ஏற்றுக்கொள்ள முடியாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனா். இதுசட்டத்துக்கு உள்பட்டு நடைபெறுவதில்லை. சட்டத்தால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இல்லை. கடனைத் திருப்ப வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகள் மேற்கொள்வதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத செயலிகள் வழியாக கடன் வாங்குவோா் மூலமாக சட்டவிரோதச் செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளது என்றனா்.
பின்னா், மத்திய நிதித்துறைச் செயலா், ரிசா்வ் வங்கி, கூகுள் இந்தியா நிறுவனம், பேசென்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
