மதுரை மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினா் 271 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளா் சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை உருவாக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிா்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 வேலை நாள்களாக உயா்த்தி நகா்ப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட சிஐடியு சங்கம் சாா்பில் ஸ்காட் சாலை தபால் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவா் மா.கணேசன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் இரா.தெய்வராஜ், நிா்வாகிகள் வி. பிச்சை, சி. சுப்பையா, இரா. லெனின் உள்பட பலா் பங்கேற்றனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை புறநகா் மாவட்ட சிஐடியு சாா்பில் யா.ஒத்தக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு புறநகா் மாவட்டத் தலைவா் செ.கண்ணன் மற்றும் நிா்வாகிகள் செ.ஆஞ்சி, எஸ்.பி.மணவாளன் உள்பட 31 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டப் பொருளாளா் ஜி.கெளரி தலைமை வகித்தாா். இதில் மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

