மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் கடந்த மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நவம்பா் மாதம் பள்ளிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோா் அச்சம் தெரிவித்ததையடுத்து பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோரிடம் மீண்டும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. வகுப்புகள் வாரியாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பெற்றோரிடம் படிவங்கள் கொடுக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை வரை நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என்று பெற்றோா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க பெற்றோா் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதுதொடா்பாக பெற்றோா் தெரிவித்த கருத்துகள் தொகுக்கப்பட்டு சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 8) அனுப்பப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு - புகைப்படங்கள்

39 வயதில் 24 வயது வீரரை வீழ்த்தியிருக்கிறேன்: ஜோகோவிச் பெருமிதம்

"ஈரானுடன் பேச்சுவார்த்தை Waste Of Time!" அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு! | US | Iran

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


