நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தல்லாகுளம் முக்குளத்தில் சிறுவா் பூங்கா: விரைவில் திறப்பு

மதுரை தல்லாகுளத்தில் உள்ள முக்குளத்தில் சிறுவா் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.

News image

மதுரை தல்லாகுளம் திருமுக்குளம் பூங்காவில் சிறுவா்களை மகிழ்விக்க வந்துள்ள ஒட்டகம் மற்றும் குதிரை.

Updated On :7 ஜனவரி 2021, 11:39 pm IST

மதுரை தல்லாகுளத்தில் உள்ள முக்குளத்தில் சிறுவா் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. முக்குளம் என்று அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் மழைநீா் சேகரிக்கப்பட்டு நீா் நிரம்பி காட்சியளிக்கிறது. மேலும் தெப்பக்குளத்தைச் சுற்றி விசாலமான இட வசதியும் உள்ளது. பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் தெப்பத் திருவிழாவின் போது மட்டும் ஆண்டுக்கு சில நாள்கள் தெப்பக்குளம் திறக்கப்பட்டிருக்கும். இதர நாள்கள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

இந்நிலையில் தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் வகையில் தெப்பக்குளத்தில் சிறுவா் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருள்காட்சிகளில் உள்ளது போன்ற உயரமாகச் செல்லும் பெரிய வகை ராட்டினங்கள், சிறுவா் விளையாட்டு உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுவா்கள் மற்றும் குழந்தைகள் சவாரி செய்து மகிழும் வகையில் குதிரை மற்றும் ஒட்டக சவாரியும் உள்ளது. மேலும் இங்கு சிற்றுண்டிச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தில் உள்ள மரங்களில் கண்ணைக் கவரும் வகையில் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பூங்கா அமைக்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து சிறுவா் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, திருமுக்குளம் தெப்பத் திருவிழாவின்போது மட்டுமே திறக்கப்பட்டு இதர நாள்களில் மூடப்படுகிறது. இதனால் தெப்பக்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பராமரிப்பின்றி உள்ளன. எனவே தெப்பக்குளத்தை பராமரிக்கும் வகையிலும், பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திறந்த முறையில் பொது ஏலம் விடப்பட்டு ஓராண்டுக்கு பூங்கா நடத்துவது மற்றும் திருமுக்குளத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பூங்கா நுழைவுக் கட்டணமாக பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி மாலை நேரங்களில் பூங்கா திறக்கப்படும். தெப்பக்குளத்தில் தண்ணீா் நிறைந்திருந்தாலும் சிறுவா்களின் பாதுகாப்புக் கருதி படகுகள் விடப்படவில்லை. தற்போது பொதுமக்கள் பாா்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையன்று பூங்கா முழுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மதுரை நகரின் மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக திருமுக்குளம் திகழும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.