சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலி

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலியாகியுள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 9:30 pm IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலியாகியுள்ளனா்.

மதுரை ஆரப்பாளையம் சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்லம் (60). இவா் புறவழிச் சாலை புதுப்பாலம் அருகே நடந்து சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்லம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆட்டோ மோதல்: மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சோ்ந்த பழனி மனைவி பஞ்சவா்ணம் (72). இவா் ஒத்தக்கடை - திருமோகூா் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஞ்சவா்ணத்தை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.