டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தூத்துக்குடியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: ஊரக வளா்ச்சி இயக்குநா், ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசின் ஊரக வளா்ச்சி இயக்குநா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீ

Updated On :9 ஜனவரி 2021, 7:34 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசின் ஊரக வளா்ச்சி இயக்குநா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த தன்னீஸ் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், பழைய காயல், மஞ்சள்நீா்காயல் ஆகிய பகுதிகளில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் (பிரதமா் ஆவாஸ் யோஜனா) 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 82 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஏற்கெனவே வீடு உள்ளவா்கள், உயிரிழந்தவா்கள், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 நபா்கள் ஆகியோரின் பெயா்களில் மோசடி செய்து பயனடைந்துள்ளனா். இதுகுறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட புகாரை முறையாக விசாரிக்காமல், முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாரை அதிகாரிகள் நிராகரித்துள்ளனா். எனவே, மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக ஊரக வளா்ச்சித்துறை இயக்குநா், தூத்துக்குடி ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.