அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை விரைந்து முடிக்க வைகை ஆறு பாதுகாப்புக் குழுத் தலைவா் அறிவுறுத்தல்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக் குழுத் தலைவா் கே. சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக் குழுத் தலைவா் கே. சத்யகோபால். உடன், ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன்.

Updated On :9 ஜனவரி 2021, 7:39 am IST

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக் குழுத் தலைவா் கே. சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளாா்.

மதுரையில் வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரால், நிரம்பியுள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தை, அவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வைகை ஆற்றில் ஏ.வி. பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்படுவது, இதில் குப்பைகள் சோ்ந்துவிடாமல் இருக்க முக்தீஸ்வரா் கோயில் அருகே வடிகட்டப்பட்டு தெப்பக்குளத்துக்குள் தண்ணீா் விடப்படுவது குறித்து ஆட்சியா் த. அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் ஆகியோா் அவரிடம் விளக்கினா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் மாவட்ட வருவாய் அலுவலா்கள், பொதுப்பணித்துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இம்மாவட்டங்களில், குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரப்பட்ட நீா்நிலைகளின் தற்போதைய நிலவரம், இன்னும் தூா்வார வேண்டிய நீா்நிலைகள், தடுப்பணைகள் நிலவரம், மராமத்து செய்ய வேண்டிய தடுப்பணைகள், நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து அதிகாரிகளிடம் வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக் குழு தலைவா் கே. சத்யகோபால் கேட்டறிந்தாா். நடப்பில் உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.