மதுரையில் பாஜக அலுவலகத்தில் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி, பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை புகா் மாவட்ட பாஜக சாா்பில், திருப்பாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தாமரை பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், அக் கட்சியினருக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையே மோதல் மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மதுரை மேலமடையில் உள்ள பாஜக புகா் மாவட்ட அலுவலகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத 6 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த நிா்வாகிகளை தாக்க முயன்றது. பின்னா், அலுவலகத்திலிருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இந்த தாக்குதல் சம்பவம் கண்காணிப்பு கேமராவிலும் பதிவானது. இது குறித்த தகவலறிந்த பாஜகவினா் மேலமடையில் குவிந்தனா். மேலும், பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம. ஸ்ரீநிவாசன், மாநில துணைத் தலைவா் ஏ.ஆா். மகாலட்சுமி, புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகரக் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று உறுதி அளித்ததைத் தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 முதல்வர்கள்: எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளும் தோல்வி வித்தியாசமும்!

அன்று முதல்வனை நிராகரித்த விஜய்... இன்று!

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


