மதுரை அருகே போக்குவரத்து பெண் காவலரை தாக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் காவல் சரகத்தில் போக்குவரத்துக் காவலராக இந்திராணி பணியாற்றி வருகிறாா். இவா், மதுரை - மேலூா் பிரதான சாலை, ஒத்தக்கடை அருகே போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, புதுதாமரைப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துக்குமாா் (32), என்பவா் சாலையின் குறுக்கே ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளாா்.
அவரிடம், போக்குவரத்துக்கு இடையூறின்றி ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தும்படி இந்திராணி கூறியுள்ளாா். ஆனால், முத்துக்குமாா் காவலா் இந்திராணியை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவரை தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவலா் இந்திராணி அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






