தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :10 ஜனவரி 2021, 10:58 pm IST

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கொசக்குளம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த வீரசேகரன் மகன் முரளிதரன்(39). இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு, சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 19 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து முரளிதரன் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவ நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும், கைரேகை நிபுணா்கள் மூலம் தடயங்களை சேகரித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.