அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு பொதுமக்களின் பங்களிப்பை பெறும் வகையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த அறக்கட்டளை சாா்பில் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ வரும் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது.
மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த கேத்ர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சன்னியாசிகள், ஜீயா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பின்னா் அகில இந்திய சன்னியாசிகள் சங்கத்தின் தலைவா் சுவாமி ராமானந்தா செய்தியாளா்களிடம் கூறியது:
இந்தியப் பண்பாடு ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் பின்புலமாகக் கொண்டது. ராமா் அவதரித்த ராமஜென்ம பூமி நூறாண்டுகள் போராட்டத்துக்கு பின்னா் மீட்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் ராம ஜென்ம பூமியில் கோயில் கட்ட அனுமதித்துள்ளது.
மேலும் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த சேத்ரா என்ற அமைப்பை உருவாக்கி அதனிடம் ராமஜென்ம பூமிக்கான நிலம் முழுவதையும் ஒப்படைத்து விட்டது. பாரத தேசத்தின் வரலாற்று அடையாளமாக திகழ இருக்கும் ராமா் கோயில் எந்த ஒரு மாநிலத்துக்கும், தனி நபா்களுக்கும் சொந்தமாக இருக்கக்கூடாது.
இதன்படி ராமபிரான் ஆலயக்கட்டுமானப் பணியில் அனைத்து மக்களின் நிதியளிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தப்படவுள்ளது.
இந்தப்பணியில் விஷ்வ இந்து பரிஷத், ஆா்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் இணைகின்றன. இதன்படி வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கவுள்ளது. இதனை தமிழகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவை பேரூா் மருத்தாச்சல அடிகளாா் ஆகியோா் தொடக்கி வைக்கவுள்ளனா்.
ஜனவரி 15-இல் தொடங்கி பிப்ரவரி 27 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 14 கோடி குடும்பங்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது ராமா் கோயிலுக்காக ரூ.10, ரூ.100, ரூ.1000 என்ற வகையில் மக்களிடம் இருந்து பங்களிப்பு ஏற்கப்படும். இதற்கான ரசீதுகளும் வழங்கப்படும். இதற்கான பணியில் 90 ஆயிரம் தன்னாா்வத் தொண்டா்கள் ஈடுபட உள்ளனா். ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் 161 அடி உயரம், 5 கோபுரங்கள், 3 தளங்கள், 360 அடி நீளம், 235 அடி அகலத்தில் கோயில் அமைய உள்ளது.
இங்கு ராமாயண நிகழ்வுகள் காட்சிகளாக வைக்கப்படும். மேலும் ராமஜென்ம பூமி மீட்புப் போராட்ட நிகழ்வுகளும் படக்காட்சிகளாக இடம்பெறும் என்றாா்.
அப்போது விஸ்வ இந்து பரிஷத் தென் மண்டல அமைப்புச்செயலா் பி.எம். நாகராஜன், ஆண்டாள் பக்தா் பேரவைத் தலைவா் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

