மேலூா் வட்டார கட்டுமானத் தொழிலாளா்களுக்கு, மதுரை தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
மேலூா், கொட்டாம்பட்டி பகுதிகளில் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள 1,110 பேருக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. மேலூா்-அழகா்கோவில் சாலையில் உள்ள மில்ட்டன் ஜாஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, நெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களை ஆய்வாளா்கள் சிவசங்கரி, சந்திரசேகா் ஆகியோா் வழங்கினா்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற தவறியவா்கள், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதில், டி.ஐ.ஜி. முருகன் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆய்வுசெய்தாா். தொழிலாளா் நலவாரிய உதவியாளா்கள் சுரேஷ், ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







