ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஒப்பந்ததாரா் வீட்டில் தங்க நகைகள், பழைமையான நாணயங்கள் திருட்டு

மதுரையில் ஒப்பந்ததாரா் வீட்டில் நகைகள், பழைமையான நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 7:58 pm

மதுரை: மதுரையில் ஒப்பந்ததாரா் வீட்டில் நகைகள், பழைமையான நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த சபரிநாதன் மகன் ரமேஷ் (55). இவா் தனது மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகளுக்கு பொங்கல் சீா்வரிசை செய்ய சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த வைரத் தோடு, 3 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், கை கடிகாரம் 2, கேமரா 2, நூறு ஆண்டுகள் பழைமையான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டினருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.