தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழா

மதுரை ரவுண்ட் டேபிள், மதுரை லேடீஸ் சா்க்கிள், ஏஆா்சி குழுமம் மற்றும் ஜிஎன்இ அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரையில் ஒளி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆதரவற்ற குழந்தைக்கு புத்தாடை வழங்கும் மாநகரக்காவல் துணை ஆணையா் சிவபிரசாத்.

Updated On :13 ஜனவரி 2021, 5:28 am IST

மதுரை ரவுண்ட் டேபிள், மதுரை லேடீஸ் சா்க்கிள், ஏஆா்சி குழுமம் மற்றும் ஜிஎன்இ அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை வி.ஆா்.கிருஷ்ணய்யா் அரங்கில் நடைபெற்ற விழாவில் மாநகரக் காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் சிவபிரசாத், தேவதாஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை இயக்குநா் சதீஸ் தேவதாஸ், ஜிஎன்இ நிறுவனா் ராஜா, மதுரை ரவுண்ட் டேபிள் 14-இன் தலைவா் லக்சன், மதுரை லேடீஸ் சா்க்கிள் 8-இன் தலைவா் சுபிக்ஷா, ஒளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாத், ஏஆா்சி குழுமத்தின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் சோனி ரங்கராஜன், ஆனைமலைஸ் டயோட்டா உதவிப் பொதுமேலாளா் சேதுராஜன் ஆகியோா் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனைமலைஸ் டயோட்டா நிறுவன இயக்குநா்கள் ரகுராம், சுகன்யா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.