தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆவணி திருமஞ்சன விழா

நாகை மாவட்டம்,  திருவாவடுதுறை ஆதீனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆவணி திருமஞ்சன

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:16 pm IST

நாகை மாவட்டம்,  திருவாவடுதுறை ஆதீனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆவணி திருமஞ்சன விழாவில் சீர்காழி முனைவர் வி. ராமதாஸின் தமிழ்ப் பணியை பாராட்டி அவருக்கு "சிவாஞனக் கலாநிதி' எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனம் ஆன்மார்த்த மூர்த்தி, அருள்மிகு ஞானமா நடராஜப்  பெருமான் ஆவணி திருமஞ்சன விழா நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, காலை நேர நிகழ்வாக ஞானமா நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர், மாலையில் ஆதீனம் வேணுவனலிங்க விலாச அரங்கில் சிறப்பு  சொற்பொழிவுகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, ஆதீன குரு முதல்வர்  நமச்சிவாய மூர்த்திகள், ஞானமா  நடராஜப் பெருமான் சன்னதிகளில் நடைபெற்ற  சிறப்பு வழிபாடுகளில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 24 ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்.

பின்னர், சீர்காழி முனைவர் வி. ராமதாஸ் எழுதிய எங்கெங்கு காணினும் எழில் முருகன், திருநெறியும், தமிழ்மொழியும் எனும் நூல்களை ஆதீன கர்த்தர் வெளியிட, அதை தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சுரேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.

விழா நிறைவில், முனைவர் வி. ராமதாஸின் தமிழ்ப் பணிகளை பாராட்டி அவருக்கு பொன்னாடை மற்றும் உருத்திராக்கம் அணிவித்து, ரூ. 5 ஆயிரத்துக்கான பொற்கிழியையும், "சிவஞானக் கலாநிதி' எனும் சிறப்பு விருதையும் ஆதீன கர்த்தர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஆதீனம் கட்டளை  சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள்,  பொது மேலாளர் சீ. ஜோதி மற்றும் பள்ளி  ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.