அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

நாகை ஆயுதப்படை மைதானத்திலிருந்த ஜீப் என்ஜின் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாகை ஆயுதப்படை மைதானத்தில்  நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த ஓர் ஜீப்பின் என்ஜின்  திருட்டுபோனது

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:15 pm IST

நாகை ஆயுதப்படை மைதானத்தில்  நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த ஓர் ஜீப்பின் என்ஜின்  திருட்டுபோனது புதன்கிழமை காலை தெரியவந்தது.

நாகை மாவட்டக் காவல் துறை பயன்பாட்டிலிருந்து, பழுது காரணமாக உபோயகமற்றதாக ஒதுக்கப்பட்ட ஒரு ஜீப், அண்மையில் பொது ஏலத்தில் விற்கப்பட்டது.

இந்த ஜீப்பை சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்திருந்தார். இருப்பினும், அந்த ஜீப் நாகை ஆயுதப்படை மைதானத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த ஜீப் என்ஜின் மற்றும் ரேடியேட்டர் ஆகியன திருட்டுபோனது.

இதுகுறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு திருட்டுபோன ஜீப் என்ஜினை கைப்பற்றி, 5 பேரிடம் சந்தேகத்தின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற மைதானம்

நாகை ஆயுதப்படை மைதானம் சுமார் 4 ஏக்கர் பரப்பைக் கொண்டது. இந்த மைதானத்தின் முன்புறம் மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மற்றப் பகுதிகளில் சுற்றுச் சுவர் இல்லாததால், இந்த மைதானத்துக்குள் ஆடு, மாடுகள் சுற்றித் திரிவது வழக்கம்.

பாதுகாப்பு இல்லாத இந்த மைதானத்தின் பின்பகுதியில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.