நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கு உதவும் வகையில் வானிலை ஆய்வு கண்காணிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இணையத்தின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் மா. மீனாட்சிசுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வேதாரண்யம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்தி இயற்கை சீற்றக்காலத்தில் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க, தூத்துக்குடி, மரக்கணம், அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் இருப்பதைபோல, வேதாரண்யத்தில் வானிலை ஆய்வு நிலையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கான இடங்களுக்கு குத்தகை உரிமை அளிப்பது, உரிமையை மாற்றுவது போன்றவை நடந்துள்ள நிலையில், அது தொடர்பான விவரங்களைத் தர தொடர்புடைய அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். இந்த மாறுதல் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்தால் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!

பார்க்கிங் பகுதியில் ‘பிளேடு’ சைக்கோ! பைக் சீட்டுகளை கிழித்தெறிந்து அட்டகாசம்!

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


