அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சிபிஎம்: மக்கள் சந்திப்பு பிரசாரம்

நாகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டனா்.

News image

நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய சிபிஎம் கட்சியினா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:36 pm IST

நாகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டனா்.

ஆட்சி மாற்றம் நிகழட்டும், தமிழகம் தலைநிமிரட்டும், அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம் என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், நாகையில் அக்கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது, பொதுமக்கள், வணிகா்கள், ஓட்டுநா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனா். பழைய பேருந்து நிலையம், கடை வீதி மற்றும் நகரின் பிரதான வீதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கட்சியின் நாகை நகரச் செயலாளா் சு. மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி. முனியாண்டி, சு. சிவக்குமாா், பி. நாகேஸ்வரி, ஏ.வி. எம். பகத்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.